கனடா தலைநகரில் அவசரகால நிலையை அறிவித்தார் மேயர்!!
கனடா தலைநகர் ஒட்டாவாவில் கொவிட் கட்டுப்பாடு எதிர்ப்பாளர்களின் போராட்டத்தால் நகரம் முடங்கியதால் ஒட்டாவாவின் மேயர் ஜிம் வாட்சன்அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களால் கொவிட் எதிர்ப்பாளர்கள் பாரவூர்தி வாகனங்களில் அணிவகுந்து நகரங்களில் கொவிட் எதிர்ப்பு பரப்புரைகளில் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த வார இறுதியில் ஒட்டாவாவில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பாரவூர்தி வாகனங்களில் நுழைந்தனர். ஒட்டாவாவில் வசிப்பவர்களுக்கு இடைவிடாது ஒலிபெருக்கிகளால் எழுந்த சத்தம், வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறுகளால் மக்கள் துன்பப்படுத்தப்பட்டால் அவர்கள் கோபமடைந்தனர்.
காவல்துறை பொறுப்பதிகாரி இது ஒரு முற்றுகை என்று அழைத்தார். ஆர்ப்பாட்டக்காரர்களின் முரட்டுத்தனமான நடத்தை குறித்து பல கனேடியர்கள் கோபமடைந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசிய போர் நினைவுச்சின்னத்தின் மைதானத்தில் பட்டாசுகளை வெடித்தனர். கோவிட்-19 கட்டுப்பாடுகளும் நீங்கும் வரை தாங்கள் வெளியேற மாட்டோம் என்று எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.
கனடாவில் சில கொவிட்ட நடவடிக்கைகளுக்கு ட்ரூடோவின் அரசாங்கம் பொறுப்பு என்றாலும், பெரும்பாலானவை மாகாண அரசாங்கங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டவை என்றாலும், அவைகள் அகற்றப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.