பிரித்தானியாவில் நேஷனல் இன்சூரன்ஸ் உயர்வு
பிரித்தானியாவில் தாெழில் புரிவோரின் தேசிய காப்பீடு (National Insurance) இந்த வருடம் ஏப்பிரல் மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த வரி அதிகரிப்பு என்.எச்.எஸ் இன் பின்னடைவைக் குறைக்க உதவும் என்று அரசாங்கம் கூறுகிறது. அத்துடன் இந்த வரி உயர்வு 12 பில்லியன் பவுண்டுகள் வருவாயை ஈட்டும் என்று சண்டே டைம்ஸில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ரிஷி சுனக் உறுதி செய்துள்ளனர். சரியான திட்டம் முன்னோக்கி செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
அரசாங்கத்தின் திட்டங்களின்படி, ஊழியர்கள், முதலாளிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் அனைவரும் ஏப்ரல் 2022 முதல் ஒரு வருடத்திற்கு 1.25p பவுண்டு கூடுதலாக தேசியக் காப்பீட்டுக்காக செலுத்துவார்கள்.
அதன் பிறகு, கூடுதல் வரி புதிய சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு வசூலிக்கப்படும்.
இந்த மாற்றங்கள் ஒரு வருடத்திற்கு £20,000 பெறுபவருக்கு கூடுதல் £89 வரி செலுத்தும் அதே வேளையில் £50,000 உள்ள ஒருவர் £464 அதிகமாக செலுத்துவார்.