November 24, 2024

சீன அரிசி அன்பளிப்பு:பொய் என்கிறது சீனா!

சீனா இலங்கைக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கவுள்ளது எனும் இலங்கை அரசாங்கத்தின் கூற்றை சீனா மறுத்துள்ளது.

ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்த சீன இராஜதந்திரி ஒருவர், இலங்கையினால் இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் சீனா அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப் பட்டுள்ள இறப்பர் -அரிசி ஒப்பந்தத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அரிசிக் கையிருப்பு பெறப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த நன்கொடை விரைவில் வழங்கப்படும் என்றும், சீன அரசு ஒப்புக்கொண்டதாகவும், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்  குறித்த பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

உரிய அரிசிக் கையிருப்பு கிடைத்தால், நாட்டின் ஐந்து மாத அரிசி தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert