நாளுக்கு நாள் தூக்கி வீசப்படும் கதிரைகள்!

A chair left on the curb on garbage day to be thrown away.
இலங்கையில் நிறுவனங்களின் தலைவர்கள் மட்டும் மாற்றப்பட்டு, சில நிறுவனங்களுக்கு பணிப்பாளர் சபை புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.
மில்கோ நிறுவனத்தின் தலைவராக இருந்த லசந்த விக்கிரமசிங்க அண்மையில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முகாமைத்துவ செயலாளர் ரேணுகா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த தெஷார ஜயசிங்க, அன்றைய தினம் ஜனாதிபதியினால் பதவி நீக்கப்பட்டு மீண்டும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மக நெகும ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை இராஜினாமா செய்யுமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் கூறியிருந்தார் .