கம்புவாரிதிக்கெதிராக போராட்டம்!
இராணுவத்தின் செயற்பாட்டிற்கு கம்பவாரிதி ஜெயராஜ் வெள்ளை அடிக்கிறார் என யாழ் பல்கலைக்கழக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கம்பவாரிதி ஜெயராஜ் ஒரு கருத்தினை முன்வைத்திருந்தார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி இணை இராணுவத்தினரிடம் பயிற்சி வழங்குவதாக உண்மையில் இது ஒரு கண்டிக்கத்தக்க விடயம் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்
இலங்கையில் குறிப்பாக இராணுவத்தினர் வந்து அரசியலில் தலையிடுவதும் சிவில் சேவையில் தலையிடுவதற்கு எதிராக அண்மையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்பன இராணுவத்தினர் மாணவர்கள் தலையிடுவதற்கு எதிராகவும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்த காலகட்டத்தில் கம்பபாரதி ஜெயராஜ் அவர்கள் தலமைத்துவ பயிற்சிக்கு அனுப்புதல் வேண்டும் என்ற கருத்து மீண்டும் இராணுவ ஆதிக்கத்திற்கு துணைபோவதாக அமைந்திருக்கின்றது.
பல்கலைக்கழகங்கள் சுயாதீனமாக இயங்க வேண்டும் மாணவர்களும் அழுத்தங்கள் இன்றி இயங்க வேண்டும்.
தற்போதைய சூழலில் பல்வேறு காரணங்களுக்காக அவர்களுடைய இணைபாடவிதான செயற்பாடுகள் போன்ற விடயங்களில் அவர்களை பின்னடிக்கின்ற செயற்பாடுகள் காணப்படுகின்றது.
மாணவர்கள் இவ்வாறான சூழலில் மாணவர்களின் நிலை அறியாமல் புத்திஜீவிகள் இவ்வாறான கருத்துக்களை கூறுவது வண்மையாக கண்டிக்கத்தக்க விடையமாக காணப்படுகின்றது.
எனவே கம்ப பாரதி ஜெயராஜ் அவருகளின் கருத்துக்கு எதிராக. அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து இந்த கருத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்த எண்ணியுள்ளோம் என்றார்.