கத்தோலிக்க தரப்பு கைவிட்டது!
கோத்தபாயவை ஆட்சிக்கு கொண்டுவர முற்பட்ட கத்தோலிக்க தரப்பு தற்போது மிக முக்கிய எதிர்தரப்பாகியுள்ளது.
பேராயர் மல்கம் ரஞ்சித்தை காவல்துறை அதிபராக நியமிக்க கோத்தா ஆதரவு பெற்ற ஞானசார தேரர் நையாண்டி செய்ய இன்னொறுபுறம் கைக்குண்டுகளை வெடிக்க வைத்திருந்த சதியில் இராணுவ புலனாய்வு பிரிவு இருப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கை பாராளுமன்றத்தில்இரண்டாவது கூட்டத்தொடர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால், இன்று (18) காலை 10 மணிக்கு சம்பிரதாகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதில்,அழைக்கப்பட்ட மதத் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.பௌத்த தேரர்கள் 16 பேர், இந்து மதகுருமார் ஒருவர், இஸ்லாமிய மதத் தலைவர்கள் இருவர் பங்கேற்றிருந்தனர். கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் எவரும் சமூகமளித்திருக்கவில்லை.
கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர்கள் புறக்கணித்துவிட்டார்களென தெரியவந்துள்ளது.