13 இந்தியாவிற்கு ஏன் தேவை?
13 இனை பற்றி அடிக்கடி பேச வைக்க இந்தியா ஏன்முற்பட்டுள்ளதென்பதை தெளிவுபடுத்தியுள்ளார் கருத்து பதிஞர் ஒருவர்.
இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழருக்கும் ஒரே நேரத்தில் நல்ல பிள்ளையாக தன்னை முன்னிறுத்த தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றது
இந்தியாவுக்கு பொறுப்புக் கூறல் இடம்பெறவேண்டும் என கிஞ்சித்தும் அக்கறை இல்லை.
அவர்கள் ‚நல்லிணக்கத்தையும்‘ 13ஆவது திருத்தத்தையும் பற்றி மட்டும் தான் பேசி வருகின்றார்கள் .
உண்மையில் 13ஆவது திருத்தத்தை பற்றி பேசுவதும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை பாதுகாத்துக் கொள்ளத் தான்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக இலங்கையின் பாதுகாப்பு வெளியுறவுக் கொள்கையில் முதன்மையான இடத்தை தக்க வைத்துக் கொள்வது தான் இந்தியாவின் ஒரே நோக்கமும் குறிக்கோளும்.
ஆனால் மறுபுறம் பெருமளவான தமிழ் தேசிய தரப்புகளின் இந்திய விசுவாசத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருப்பது தமிழ் தேசிய துயரமாக இருக்கின்றது .
குறிப்பாக தமிழ் தலைமைகள் இந்தியாவின் இரட்டை நிலைப்பாடு குறித்து அமைதியாகவே இருக்கின்றார்கள்
பூகோள அரசியல் விளையாட்டில் தாம் தமிழ் மக்கள் பகடைக் காய்களாக பாவிக்கப்படுகின்றார்கள் என்பதனை தெரிந்தும் மௌனமாக இருக்கின்றார்கள்
இந்தியாவை எமது ராஜதந்திர செயற்பாடுகளின் மையமாக வைத்திருப்பதிலுள்ள மட்டுப்பாடுகளை உணர்ந்து கொள்ள மறுக்கின்றார்கள்
தற்போது ஒற்றையாட்சிக்குள் 13 ஆம் திருத்தத்தை முன்னிறுத்தி இந்தியாவின் பங்களிப்போடு தமிழ் மக்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளுக்கான சர்வதேசப் பரிமாணத்தை முடித்து வைக்க துணை நிற்கின்றார்கள்