நோவக் ஜோகோவிச்சை நாடு கடத்த ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு!!
டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் தனது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை காக்கும் வாய்ப்பை இழந்தார். ஆஸ்திரேலிய நீதிமன்றம் அரசாங்கத்தை நாடு கடத்தும் உத்தரவை உறுதி செய்தது.
34 வயதான செர்பியரின் விசாவை பொது நலன் அடிப்படையில் இரத்து செய்ய குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் வெள்ளிக்கிழமை எடுத்த முடிவுக்கு மூன்று பெடரல் நீதிமன்ற நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை ஆதரவளித்தனர்.
கோவிட்-19 தடுப்பூசி போடப்படாத ஜோகோவிச், நாடு கடத்தப்படும் வரை மெல்போர்னில் காவலில் இருப்பார் என்பதே அந்தத் தீர்ப்பின் பொருள்.
ஒரு நாடுகடத்தல் உத்தரவில் பொதுவாக ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவதற்கு மூன்று வருட தடையும் அடங்கும்.
ஜோகோவிச்சின் கோவிட் தடுப்பூசி நிலை குறித்த பரபரப்பான 11 நாள் நடந்த இழுபறியில் 21வது கிராண்ட்ஸ்லாம் என்ற அவரது கனவை முடிவுக்குக் கொண்டு வந்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பில் தான் மிகவும் ஏமாற்றமடைந்ததாக ஜோகோவிச் கூறினார். ஆனால் நான் வெளியேறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒத்துழைப்பேன் என்றார்.
கடந்த வாரங்களின் கவனம் என் மீது இருப்பது எனக்கு சங்கடமாக உள்ளது. மேலும் நான் விரும்பும் விளையாட்டு மற்றும் போட்டியில் நாம் அனைவரும் இப்போது கவனம் செலுத்த முடியும் என்று நம்புகிறேன் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் ஜோகோவிச் இருப்பது ஆஸ்திரேலிய பொதுமக்களின் உடல்நலம் மற்றும் நல்ல ஒழுங்கிற்கு ஆபத்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மற்றவர்கள் தடுப்பூசி போடும் முயற்சிகளுக்கு எதிர்மறையாக இருக்கலாம் என்ற அடிப்படையில் ஹாக் விசாவை (நுழைவிசை) இரத்து செய்தார்.
ஜோகோவிச்சின் நிலைப்பாடு தடுப்பூசிக்கு எதிரான உணர்வைத் தூண்டும் என்றும், தடுப்பூசி இல்லாமல் சிலர் தொற்றுநோயை எதிர்கொள்ள வழிவகுக்கலாம் என்றும், எதிர்ப்பு வாக்ஸெர் ஆர்வலர்களை போராட்டங்கள் மற்றும் பேரணிகளில் திரட்டுவதற்கு ஊக்கமளிக்கும் என்றும் ஹாக் கூறினார்.
வீரரின் உயர் அதிகாரம் கொண்ட சட்டக் குழு அவரை நாடு கடத்துவதற்கான ஆஸ்திரேலியாவின் முயற்சியை „பகுத்தறிவற்றது“ மற்றும் „நியாயமற்றது“ என்று சித்தரித்தது, ஆனால் சில நேரங்களில் அவர்கள் கடுமையான கேள்விகளை எதிர்கொண்டனர்.
ஜோகோவிச்சின் வழக்கறிஞர் நிக் வுட், அவரது வாடிக்கையாளர் தடுப்பூசி எதிர்ப்பு ஆதரவைப் பெறவில்லை என்றும் இயக்கத்துடன் தொடர்பு இல்லை என்றும் வலியுறுத்தினார். ஜோகோவிச்சின் தற்போதைய கருத்துக்கள் என்னவென்று அரசாங்கத்திற்குத் தெரியவில்லை என்று வூட் கூறினார்.
நீதிமன்ற தீர்ப்புக்கு டெனிஸ் இரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்த ஜோகோவிச் ஆதரவாளரான 44 வயதான நடாஷா மர்ஜ்னோவிச் தெரிவிக்கையில்:-
இன்று அவர்கள் செய்தது நீதியைத் தவிர ஏனைய அனைத்தைம் என்று கூறினார். அவர்கள் ஒரு அழகான விளையாட்டு வீரரையும் அவரது வாழ்க்கையையும் டெனிசை விரும்பும் அனைவரையும் கொன்றனர் என்றார்.
இதேபோன்று கனேடிய டென்னிஸ் வீரர் வாசெக் போஸ்பிசிலும் இந்த நடவடிக்கை குறித்து ருவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நோவாக் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு அரசாங்கத்தால் விலக்கு அளிக்கப்படாவிட்டால், அவர் ஒருபோதும் சென்றிருக்க மாட்டார். அவர் ஆஸ்திரேலிய ஓபனைத் தவிர்த்துவிட்டு தனது குடும்பத்துடன் வீட்டில் இருந்திருப்பார். யாரும் இந்த குழப்பத்தைப் பற்றி பேச மாட்டார்கள்.
தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில் இங்கு ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் இருந்தது. அதைவிட வெளிப்படையாக இருக்க முடியாது. இது அவருடைய தவறல்ல. அவர் நாட்டிற்குள் கட்டாயப்படுத்தவில்லை. சொந்த விதிகளை உருவாக்கவில்லை. அவர் வீட்டில் இருக்க தயாராக இருந்தார் என அவர் மேலும் தனது பதிவில் பதிவிட்டிருக்கிறார்.