November 23, 2024

பார் பெமிட் கோடிகளில் வருமானம்!

மதுபான சாலைகளிற்காக அனுமதிப்பத்திரங்களை விற்று கோடிகளில்  வருமானம் ஈட்டுவதில் அரச அமைச்சர்கள் மும்முரமாகியுள்ளனர்

கடந்த 2021 ஆம் ஆண்டு 150 மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தவிர ஆடம்பர சிறப்பங்காடிகளுக்கு 69 அனுமதிப்பத்திரங்களும், கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சாதாரண மதுபான விற்பனை(நகரங்களில்) நிலையங்களை திறப்பதற்கான ஒரு அனுமதிப்பத்திரம் கூட கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு எதிராக மதத் தலைவர்கள் பலர் தமது எதிர்ப்பை வெளியிட்டு, வந்தனர்,

எனினும் தற்போதைய அரசாங்கம் கடந்த ஆண்டு அதிகளவிலான மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ள போதிலும் பௌத்த பிக்குமார் உட்பட எந்த மதத் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert