மைத்திரிக்கு சந்தர்ப்பமில்லை
மைத்திரிபால சிறிசேன தற்போது வரை பொதுஜனபெரமுனவில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற நபர்.இந்நிலையில் அவர் எதிர்தரப்பின் பொது வேட்பாளராக வருவதற்கு சாத்தியமில்லையென எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் ஆளும் தரப்பின் அமைச்சர்கள் பலரும் தற்போது நீக்கப்பட்டுவருகின்றனர்.இவ்வாறு வெளியே விடப்படும் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாற்று சக்தியாக உருவாகுவதற்கு சாத்தியமில்லையென அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய 2023நடுப்பகுதிக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும்.ஆயினும் ஐக்கிய மக்கள் சக்தியி;ன வேட்பாளர் இல்லாத பொதுவேட்பாளரை நிறுத்தும் ஆதரிக்கும் எண்ணம் கட்சிக்கு இல்லை. 2015 இல் பொதுவேட்பாளரை நிறுத்தியதன் மூலம் உரிய பாடத்தை படித்தோம். அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் பொதுக்கொள்கையுடன் செயற்பட எந்த கட்சியும் முன்வரலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.