சீனாவின் இராணுவத்திறனைக் காட்டும் விமானக் கண்காட்சி!!
ஆசிய பசிபிக் பகுதியில் வளர்ந்து வரும் மூலோபாய போட்டிக்கு மத்தியில் சீனா இவ்வாரம் நடத்தவுள்ள விமானக் கண்காட்சியில் தனது அதிநவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தும் எனும் என செய்திகள் வெளியாகியுள்ளன.குறித்த கண்காட்சியில் சீனாவின் அதி நவீன போர் விமானமான J-20 சம்பந்தப்பட்ட திகைப்பூட்டும் விமான நிகழ்ச்சிகள் இருப்பதாக சீனாவின் அரச பத்திரிகையான குளோபல் ரைம்ஸ் அறிவித்ததுள்ளது.
J-16D மின்னணு போர் விமானம், உயரப்பறக்கும் WZ-7 ட்ரோன் மற்றும் உயரமாகவும் அதிவேகமாவும் பறக்கக்கூடிய WZ-8 ட்ரோன் உள்ளிட்ட பிற மேம்பட்ட விமானங்களும் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.
J-16D அதன் சிறகுகளில் இரண்டு பெரிய மின்னணுக்களைக் கொண்டுள்ளது. இது ரேடார் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளிட்ட விரோத மின்னணு உபகரணங்களை சீர்குலைக்கவும் ஜாம் செய்யவும் பயன்படும் என்று குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இது ஒரு புதிய ஏவியோனிக்ஸ் அமைப்பையும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களையும் கொண்டுள்ளது.
அத்துடன் உள்நாட்டு விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான நாட்டின் முயற்சிகளை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
குறித்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் வானிலும் அல்லது தரையில் காட்சிப்படுத்தவுள்ளன. சீனா தனது இராணுவ வலிமையையும், அடுத்த தலைமுறை குழு ராக்கெட் மற்றும் ஹெவி-லிப்ட் ஏவுகணை வாகனம் உட்பட அதன் விண்வெளி இலட்சியங்களையும் காட்டுகிறது.
AG600, உலகின் மிகப்பெரிய நீர்விசிறும் விமானம் தீயணைப்பு மற்றும் கடல் மீட்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
விங் லூங் II, அமெரிக்க MQ-9 ரீப்பரை ஒத்த ஆயுத ட்ரோன், யுனைடெட் அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டது.
ஆளில்லா உலங்குவானூர்திகள், மிதக்கும் ஏவுகணைகள் மற்றும் புதிய தலைமுறை ட்ரோன்கள் உட்பட ஃபைஹாங் என்ற புதிய தொடர் ட்ரோன் தயாரிப்புகள் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.