November 25, 2024

புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்தது வடகொரியா

வடகொரியா நேற்று சோனை செய்த ஏவுகணை புதிதாக உருவாக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்று அரசு செய்தி ஊடகமான கேசிஎன்ஏ இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் கடலை நோக்கி குறித்த ஏவுகணையை வீசியது என தென் கொரியாவின் இராணுவம் கூறியது.

இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னர் ஆயுத திட்டங்களில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் இரட்டை நிலையைக் கைவிடுமாறு பியாங்யாங் அழைப்பு விடுத்ததுள்ளது. அத்துடன் ஆயுத அமைப்பின் வளர்ச்சி வட கொரியாவின் பாதுகாப்பு திறன்களை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளது.

குறித்த சோதனை வட கொரிய தலைவர் கிம் ஜாங் ஆய்வு செய்யவில்லை என்றும் குறித்த ஏவுகணையின் முதல் சோதனையை விஞ்ஞானிகளே ஆய்வு செய்து ஏவுகணையின் வழிசெலுத்தல் கட்டுப்பாடு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்தனர் என்று கூறியுள்ளது.

Hwasong-8 என அழைக்கப்படும் இந்த ஏவுகணை, தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுடன் சூழ்ச்சிகளுடன் தாக்கும் திறன் கொண்டது எனக் கேசிஎன்ஏ மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.