ஊழியர்கள் இல்லாத பல்பொருள் அங்காடி!!! துபாயில் திறப்பு!!
துபாய் நகரில் ஊழியர்கள் இல்லாத முற்றிலும் தானியங்கி முறையிலான பல்பொருள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் அமைந்துள்ள துபாய் நகரின் மத்திய கிழக்கு பகுதியில் வியாபாரிகள் இல்லாத முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் ‚கேரிபோர்‘ சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. இதில், நொறுக்குத் தீனி, குளிர்பானம் உட்பட அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.கேரிபோர் மொபைல் ஆப் இருப்பவர்கள் மட்டுமே இந்த தானியங்கி பல்பொருள் அங்காடிக்குள் பொருட்கள் வாங்க முடியும். கடை முழுதும் ஏராளமான கண்காணிப்பு கமராக்கள், சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு கடையின் வாயிலுக்கு வந்ததும், அவர்களுடைய மொபைல் போனுக்கு அவர்கள் எடுத்துள்ள பொருட்களுக்கான பில் வந்து விடும்.தொகையை டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற கடையில வியாபாரிகள், ஊழியர்கள் இல்லாத வணிக நிலையங்கள் மக்களின் வரவேற்பை பெறும் எனகேரிபோர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹனிஸ் வெய்ஸ் கூறுகிறார். அமேசான் நிறுவனம் 2018ல் அமெரிக்காவில் இதேபோன்ற ஊழியர்களே இல்லாத தானியங்கி சூப்பர் மார்க்கெட் திறந்தது.