தேவையேற்பட்டால் தலீபான்கள் அரசுடன் இணைந்து செயல்படத் தயார்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். தங்கள் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று தலீபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் தலீபான்கள் அரசை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.அதேவேளையில், பிற முன்னணி உலக நாடுகள் இவ்விவகாரத்தில் இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. தலீபான்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கனடா அறிவித்துள்ளது. இந்த நிலையில், தேவையேற்பட்டால் தலீபான்கள் அரசுடன் இணைந்து செயல்படத் தயார் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.