இரத்தினபுரியில் தீவிரமாக பரவும் மற்றுமொரு ஆபத்தான நோய்!
இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நிலையில் இவ்வருடத்தின் இம் மாதம் வரை இந்நோயால் 5 பேர் ப லியாகியுள்ளனர் என சப்ரகமுவ மாகாண தொற்றுநோய் வைத்தியப்பி ரிவின் வைத்திய நிபுணர் லக்மால் கோனார நேற்று தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தின் சுகாதா ர இணைப்புக்குழுக்கூட்டத்தில் கல ந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்,.
இவ் விடயமாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இம்மாவட்டத்தில் இன்று வரை பதிவாகியுள்ள பாதிக்கப்பட்டுள்ள 344 நோயாளர்களிலிருந்தே இம்மரணங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலைமை இன்றைய கோவிட் சூழ்நிலைகளுக்கு மத்தியில் வேறு பல தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
இலங்கையில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவும் மாவட்டமாக இரத்தின புரி மாவட்டம் காணப்படுகிறது.
அதிலும் கடந்த ஐந்து வருடங்களாக இந் நிலைமை நிலவி வருகிறது.இம்மா வட்டத்தின் 19 பொது சுகாதார வைத்திய பிரிவுகளில் நிவித்திகல, பெல்மதுளை, கிரியெல்ல, கலவான, எலபாத்த ஆகிய பிரிவுகளிலேயே அ திக நோயாளர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.