Mai 12, 2025

இலங்கையின் வீடு ஒன்றிலிருந்து மூன்று சடலங்கள்!

 

கல்கமுவ பகுதியில் வீடு ஒன்றிலிருந்து மூன்று சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதில், 28 வயதுடைய ஆண், 28 வயதுடைய பெண் மற்றும் 10 வயதுடைய சிறுவனின் உடல்களே மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.