கழுத்து பகுதியில் உள்ள கருமையை எப்படி போக்குவது?
பொதுவாக கழுத்தில் உள்ள கருமையானது, வெயிலில் அதிக நேரம் அலைவதாலும், செயின் போன்றவற்றை அணிவதாலும் அந்த இடத்தில் கருமையாகிவிடுகிறது.
குறிப்பாக இது பல பெண்களை சங்கடத்துள்ளாக்கும் ஒரு விஷயமாகும். இந்த கருமையை வேறும் சோப்பு கொண்டு போக்குவது கடினம்.
அதே சமயத்தில் நீங்கள் முகத்திற்கு என்ன தான் அலங்காரம் செய்து இருந்தாலும் கூட, கழுத்தில் கருமை இருந்தால் அப்படியே இருக்கும். இதனை போக்க அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
ஒரு சில இயற்கை பொருட்களை கொண்டு இந்த பிரச்சினையை சரி செய்ய முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
அந்தவகையில் கழுத்து பகுதியில் உள்ள கருமையை எப்படி போக்கலாம் என்று பார்ப்போம்.
- இரவு நேரங்களில், கழுத்துப் பகுதியில் பாதாம் எண்ணெய்யை தேய்த்து, மசாஜ் செய்துவிட்டு, தூங்கிவிட வேண்டும். அடுத்த நாள், அந்த இடத்தில் சுடுநீரை ஊற்றி கழுவி விடவேண்டும்.
- கற்றாழையின் குழைந்து காணப்படும் சதைப்பகுதியை வெட்டி எடுத்து, அதனை கழுத்துப் பகுதியில் போட்டு தேய்த்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை நிறம் காணாமல் போய்விடும். ஆனால், சீதளமான உடல் கொண்டவர்கள் கொஞ்சம், அல்லது கற்றாழை உடலுக்கு ஒத்துக் கொள்ளாதவர்கள், கீழே கொடுக்கப்பட்ட மற்ற டிப்ஸ்களை பயன்படுத்துங்கள்.
- ஆப்பிள் சிடர் வினிகரில் பஞ்சை நனைத்து கழுத்தை சுற்றிலும் தடவி வர கருமை நீங்கும்.
- தயிரை கழுத்தை சுற்றிலும் தடவிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். தினமும் செய்ய கருமை நீங்கும்.
- கருமை நிறத்தை போக்குவதில், அதிக திறன் கொண்டது உருளைக்கிழங்கின் சாறு. இந்த சாற்றை, கழுத்துப் பகுதியில் போட்டு, 20 நிமிடங்களுக்கு பிறகு, கழுவினாலும், இந்த பிரச்சனை சரியாகும்.