சத்துக்கள் நிறைந்த தக்காளி ஆலிவ் சாலட்
தக்காளி பழத்தில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இன்று தக்காளி, ஆலிவ் சேர்த்து சத்தான சாலட் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெங்களூரு தக்காளி – 2
வெள்ளரிக்காய் – 1
பிளாக் ஆலிவ் – 6
வெங்காயம் – 2
உப்பு – சுவைக்க
மிளகு தூள் – சுவைக்க
துளசி இலை – 3-4
பால்சமிக் வினிகர் (Balsamic vinegar) – 2 மேஜைக்கரண்டி
செய்முறை :
வெங்காயம், பிளாக் ஆலிவ், பெங்களூரு தக்காளியை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
துளசி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பிளாக் ஆலிவ், வெள்ளரிக்காய், பெங்களூரு தக்காளியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகு தூள், பால்சமிக் வினிகர் (Balsamic vinegar) சேர்த்து நன்றாக கலந்து துளசி இலை தூவி பரிமாறவும்.
சூப்பரான சத்தான தக்காளி ஆலிவ் சாலட் ரெடி.