சினொவக் தடுப்பூசி தொடர்பில் ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்
சீனாவின் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான சினொவக் தடுப்பூசி தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி, சினொவக் தடுப்பூசியை இரண்டாவது முறை போட்டுக்கொண்ட 6 மாதங்களில், அதன் செயல்திறன் குறையத்தொடங்கும் என்று சீன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பூஸ்டர் எனப்படும் கூடுதலாகப் போட்டுக்கொள்ளப்படும் தடுப்புமருந்து, அதன் செயல்திறனை மேம்படுத்தும் என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இரண்டாம் தடுப்பூசி போடப்பட்டு ஆறிலிருந்து 8 மாதங்களுக்குள், கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால், நோய் எதிர்ப்புச் சக்தி மூன்று மடங்காகப் பெருகும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
18 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடம்-இருந்து பெறப்பட்ட இரத்த மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அந்த விபரங்கள் தெரியவந்தன.
இதேவேளை, சினொவக் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.