எதிரணியினுள் பிளவு இல்லை:சரத் பொன்சேகா!
இலங்கையில் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காகவே, ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதென்ற தோற்றத்தை காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது” என பிரதித் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்தவொரு பிளவும் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் சம்பிக்க ரணவக்க எம்.பிக்கும் இடையில் கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளனவென செய்திகள் வெளிவந்துள்ளன எனத் தெரிவித்த சரத்பொன்சேகா எம்.பி, கடந்த இரண்டு நாள்களாக ரணவக்க எம்.பியை நான் சந்தித்தேன்.
அப்போது கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டமைக்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை என்றார். என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். எஸ்.ஜே.பியில் குறிப்பாக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், எம்.பி. சம்பிகா ரணவக்காவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு சம்பிக்க ரணவக்க முயன்றுவருகின்றார் என செய்திகள் வெளிவந்துள்ளன. இதேவேளை, தனது சொந்த கட்சியிலிருந்து இராஜினாமா செய்துவிட்டே சம்பிக்க ரணவக்க, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கினார் என்றும் பொன்சேகா, அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.