März 28, 2025

மருத்துவர்களது சிபார்சிலேயே முடக்கம்?

இலங்கையில் தேசிய ரீதியான முடக்கம் வெற்றி பெற்றிராத நிலையில் மருத்துவ அதிகாரிகளது குரல்களை செவிமடுக்க இலங்கை அரசு தயாராகியுள்ளது.

தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் இன்னும் சில காலத்துக்கு நீடிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளனவென  இலங்கை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

பயணத் தடையை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என்றார்.

“பயணத் தடையின் காரணமாக கொரோனா மரணங்களும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தாலும், மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படவில்லை” என்றார்.

ஆகவே, பயணத் தடையை மேலும் சில நாள்களுக்கு நீடிப்பது என்ற தீர்மானமே தற்போதைக்கு இருப்பதாகவும் தினமும் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றார்.