காணாமல் ஆக்கிய நாவற்குழியில் இடைத்தங்கல்!
யுத்த காலத்தில் யாழ்.மாவட்ட செயலக உணவுக்களஞ்சியமாக இருந்த நாவற்குழி களஞ்சியம் படையினரால் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நாவற்குழி இடைத்தங்கல் நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1996ம் ஆண்டு புலிகளது கட்டுப்பாட்டிலிருந்த யாழ்;ப்பாணம் படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இதன் போது சுமார் 6இலட்சம் மக்கள் வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்து தென்மராட்சி மற்றும் வடமராட்சியில் அடைக்கலம் புகுந்திருந்தனர்.
அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவின் அழைப்பையடுத்து வலிகாமம் திரும்பிய மக்கள் நாவற்குழி களஞ்சியத்தில் அமைக்கப்பட்டிருந்த படைமுகாமில் ஆயிரக்கணக்கில் வேட்டையாடப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.
அங்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களே செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டதுடன் காணாமல் போதல் வரலாற்றின் உச்சமாகவும் அமைந்திருந்தது.
இத்தகைய நாவற்குழி களஞ்சியமே தற்போது இலங்கைப்படையினரின் வைத்தியசாலையாகியுள்ளது.