கர்ப்பிணிகளிற்கு தடுப்பூசி:நல்லூரில் 55?
வடகிழக்கு உட்பட இலங்கை முழுவதும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை முதல் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. மகப்பேறு வைத்தியர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, ஒரு மாதத்திற்குள் கர்ப்பிணித் தாய்மார்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை நோக்கமாக கொண்டு அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதுவரை நாட்டில் கொரோனா தொற்றினால் 8 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் 156 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதி கடந்த மாதம் முதல் முடக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை அப்பகுதியில் வசிக்கும் 156 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது