November 21, 2024

மாவட்ட ரீதியாவே ஊசி:பிரதேசவாதம் வேண்டாம்!

வடக்கு மாகாணத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் யாழ்ப்பாணத்திற்குள் மாத்திரமே பகிர்ந்தளிக்கப்பட்டு வடக்கின் ஏனைய மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விநோகதரலிங்கம்  அரசியல் செய்திருந்த நிலையில் தடுப்பூசிகள் மாகாண ரீதியாக வழங்கப்படவில்லை. தடுப்பூசித்திட்டம் மாகாண ரீதியாக முன்னெடுக்கப்படும் திட்டமும் அல்ல. அது மாவட்ட ரீதியாகவே முன்னெடுக்கப்படுகின்றது. தடுப்பூசிகள் வழங்கப்பட்ட ஏனைய பிரதேசங்களை நோக்கும் போது இது தெளிவாகும். அனைத்தும் மாவட்ட ரீதியாகவே வழங்கப்பட்டுள்ளதென விளக்கமளித்துள்ளார் மருத்துவர் கு.பிரதீபன்.

பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்கள் இனங்காணப்பட்டு குறித்த தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

கொரோனாவால் ஆபத்து மிகுந்த மாவட்டங்கள் பட்டியலில் யாழ்ப்பாணம் 9வது இடத்தில் உள்ளது.

இதுவரை சுமார் 3600 பேர் யாழில் கொரோனா தொற்றாளர்களாக இனங்காண பட்டுள்ளனர். 48 இறப்புகள் பதிவாகியுள்ளது. தற்போது 7936 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே யாழ் மாவட்டத்திற்கு 50000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அவை வட மகாணத்திற்கென குறித்தொதுக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்ல.

நேற்று மாத்திரம் வடமாகாண தொற்றாளர் விபரம்

யாழ்ப்பாணம் 96

வவுனியா 30

கிளிநொச்சி 18

முல்லைத்தீவு 3

மேலும் சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்டு இலங்கையை நேற்று வந்தடைந்த 10 இலட்சம் தடுப்பூசிகளில் 4 இலட்சத்து ஐம்பதாயிரம் தடுப்பூசிகள் முதல் கட்டமாக 12 மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன அவையும் மாகாண ரீதியாக பகிரப்படவில்லை என்பதனை கவனியுங்கள்.

மாத்தளை 25000

நுவரெலியா 50000

அம்பாந்தோட்டை 50000

மட்டக்களப்பு 25000

திருகோணமலை 25000

அம்பாறை 25000

அனுராதபுரம் 50000

பொலனறுவை 25000

குருநாகல் 25000

புத்தளம் 25000

பதுளை 50000

மொனராகலை 25000

கேகாலை 50000

ஆகவே கொரோனா தடுப்பூசிகள் மாவட்டரீதியாகவே பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பதையும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்றன என்பதையும் புரிந்து கொண்டால் தேவையற்ற பிரிவினைவாத பேச்சுக்களுக்கு இடமிருக்காதெனவும் குறித்த மருத்துவர் தகவல் வெளியிட்டுள்ளார்.