புதுக்குடியிருப்பிலும் ஒன்று?
வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவர்களை அனுமதிக்க மேலும் 3 சிகிச்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
நேற்று {5} முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்பிரகாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 2 ஆம் மற்றும் 3ஆம் விடுதிகள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம் பகுதியில் இராணுவத்தினரின் வைத்தியசாலையாக இயங்கிய இடம் கொரோன சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றது.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் ஒரு விடுதி கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இதனிடையே தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 436 பேர் நாடளாவிய ரீதியில் நேற்றைய நாளில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து தற்போதுவரை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஒரே நாளில் அதிகளவானவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் நபர்களை அடையாளம் காண்பதற்காக பொது இடங்களை அண்மித்த பகுதிகளில் நாடு முழுவதும் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.