März 28, 2025

வாளைச்சேனையில் விபத்து இருவர் பலி!

வாழைச்சேனை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மியாங்குளம் பகுதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் நேற்றிரவு (6) 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, வாழைச்சேனை – கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் பகுதியில் இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.குறித்த பகுதியில் பயணித்த மகிழுந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நேற்றிரவு விபத்துக்குள்ளானது.

விபத்தில் மகிழுந்தில் பயணித்த  பரமேஸ்வரன் தனுயன், (வயது 31) மற்றும் வினோகா துரைசிங்கம் (வயது 31) என்ற இருவருமே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.