März 28, 2025

டக்ளஸ் வாழ்த்துப்பார்சல்!

 

தமிழகத்தின் மீனபிடித்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சராக பதிவியேற்கவுள்ள அனிதா ஆர். இராதாகிருஸ்ணனுக்கு வாழ்த்துக்களை யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவித்துள்ளார் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

எதிர்காலத்தில் கடற்றொழிலாளர் சார்பான விவகாரங்களில் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளாராம்.

தமிழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் நாளை பதவியேற்கவுள்ளது.

இந்நிலையில், புதிய மீன்பிடித்துறை அமைச்சருடன் தொலைபேசி ஊடாக உரையாடிய இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாராம்.

அண்மையிலேயே வடக்கு கடலை இந்திய மீனவர்களிற்கு வாடகைக்கு விடுவது தொடர்பில் கருத்து தெரிவித்து டக்ளஸ் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்.

இவ்விடயம் தென்னிலங்கை  மீனவ அமைப்புக்களிடையே கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசு டக்ளஸ் தேவானந்தாவின் அறிவிப்பை மறுதலித்திருந்தது.