Mai 12, 2025

ஆளாளுக்கு ஒவ்வொரு பிரச்சினை!

இலங்கை முழுவதும் மூன்றாவது கொரோனா அலை அச்சத்தில் மூழ்கியிருக்க வடகிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ன மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் மாகாணசபை தேர்தல் நடப்பதற்கான எந்த அறிவிப்பும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.வடகிழக்கு இணைக்கப்பட்டு மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில் நான் போட்டியிடுவேன்” என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.