März 29, 2025

ஒரு பறவை மீது மற்றொரு பறவை ஒய்யாரமாகச் சவாரி

கடற்பிரதேசத்தில் கடற்பறவையின் மீது மற்றொரு கடற்பறவை அமர்ந்துகொண்டு ஒய்யாரமாக சவாரி செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகாத நிலையில், ட்விட்டரில் கவனம் பெற்ற இந்த வீடியோ, 2.8 மில்லியனுக்கு மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஒரு கடற்பறவை மீது மற்றொரு பறவை அமர்ந்து கொண்டு சிறிதுதூரம் பயணிக்கிறது. பின் இரண்டும் பிரிந்து தனித்தனியாக பறந்து செல்கின்றன.