1.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனையான மூடுகாலணி!!
அமெரிக்கன் ராப்பரான (பாடகர்) கன்யே வெஸ்ட் என்ற இசைக்கலைஞர் வடிவமைத்து அணிந்த மூடுகாலணி ஏலத்தில் 1.8 மில்லியன் அமொிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இதுவே அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மூடுகாலணயாகும்.நைக் ஏர் யீஸி 1 வகை மூடுகாலணியின் முன்னைய சாதனையை இது முறியடித்துள்ளது. இந்த மூடுகாலணி கடந்த ஆண்டு 615,000 டொலருக்கு விற்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டில் கிராமிஸில் நிகழ்த்தும்போது வெஸ்ட் இந்த மூடுகாலணிகளை அணிந்திருந்தார். அவை அமெரிக்க அளவு 12, அல்லது இங்கிலாந்து 11 ஆகும்.
அரியவகை பாதணிகளில் முதலீடு செய்யும் இணையத் தளமான RARES ஆல் வாங்கப்பட்டது.