November 21, 2024

நல்லாட்சி விடுவித்ததை கோத்தா பிடுங்குகின்றார்?

நல்லாட்சி அரசு வலி.வடக்கில் காணி விடுவிப்பதாக பிரச்சாரப்படுத்தி சென்றுவிட மறுபுறம் விடுவிக்கப்பட்ட சொற்ப காணியை மீள ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது இலங்கை இராணுவம்.

காங்கேசன்துறை மத்தியில் 2018ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுவிக்கப்பட்ட காணியை இரவோடு இரவாக இராணுவம் உரிமை கோரி அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளது.

பருத்தித்துறை பொன்னாலை வீதியில் காங்கேசன்துறை மத்தி கிராம சேவகர் பிரிவில் இராணுவத்தினரின் பிடியில் 27 ஆண்டுகள் இருந்து 2018ஆம் விடுவிக்கப்பட்ட நிலமே இவ்வாறு இரவோடு இரவாக இராணுவம் உரிமை கோரி அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளனர்.

இவ்வாறு அறிவித்தல் நாட்டியுள்ள நிலமானது இருவருக்கு உரித்தான 8 பரப்புக் காணியாகும் இப் பகுதி விடுவிக்கப்பட்ட பின்பு காணி உரிமையாளர்கள் துப்பரவுப் பணியில் ஈடுபட்டதோடு இதன் அருகே காணப்பட்ட வீதியினை பிரதேச சபையும் புதிதாக அமைத்து வழங்கியிருந்தது.

இந்த நிலையிலேயே குறித்த நிலம் தற்போது இராணுவம் மீண்டும் கையகப்படுத்த முனைவதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது