Mai 13, 2025

இளவரசர் ஃபிலிப் காலமானார்!

பிரித்தானியாவின் எலிசபெத் அரசியாரின் கணவர் இளவரசர் ஃபிலிப் (Philip) தனது 99வது வயதில் காலமானார்.

இளவரசர் ஃபிலிப் இன்று காலை விண்ட்சோர் கோட்டையில் (Windsor Castle) காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

உலக மக்களுடன் இணைந்து, அரசக் குடும்பத்தாரும் துக்கம் அனுசரிப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டது.