November 24, 2024

இங்கிலாந்தில் அத்தியாவசிமற்ற கடைகளை மீண்டு திறக்க வாய்ப்பு!

இங்கிலாந்தில் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெளியிடுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.டவுனிங் தெருவில் இன்று நடைபெறவுள்ள ஊடக சந்திப்பில் நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டுகளைத் தளர்த்துவது குறித்த விதிகள், மாற்றங்கள் குறித்து அறிவிப்புகளை பிரதமர் வழங்க உள்ளார்.

அத்தியாவசியமற்ற கடைகளை மீண்டும் திறக்க முடியுமா மற்றும் உணவகங்கள் ஏப்ரல் 12 முதல் வெளியில் சேவை செய்ய ஆரம்பிக்க முடியுமா என்றும் அவர் கூறுவார்.

கீழ் வரும் விடங்களில் தளர்வு வெளிவரவுள்ளது

  • சிகையலங்கார நிபுணர் மற்றும் முடிதிருத்தும் போன்ற நெருக்கமான தொடர்பு சேவைகள் மீண்டும் திறக்கப்படலாம்.
  • உயிரியல் பூங்காக்கள், மிருகச்காட்சி சாலைகள், தீம் பூங்காக்கள், நூலகங்கள் மற்றும் சமூக மையங்களைப் போல உடற்பயற்றி நிலையங்கள் உணவகங்கள் போன்ற அத்தியாவசியமற்ற கடைகள்  மீண்டும் திறக்கப்படலாம்.
  • ஒரே வீட்டின் உறுப்பினர்கள் இங்கிலாந்தில் சுயமாக தங்குமிடத்தில் விடுமுறை எடுக்கலாம்.
  • திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளில் 15 பேர் வரை கலந்து கொள்ளலாம்.
  • தற்போது வெளிநாட்டு விடுமுறைகள் இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டுள்ளன.
  • ஒரு நல்ல காரணமின்றி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் மக்களுக்கு இங்கிலாந்தில் 5,000 பவுண்ஸ்கள் அபராதம்.

கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தற்போதைய திட்டத்தின் கீழ், இங்கிலாந்தில் மக்கள் விடுமுறைக்கு வெளிநாடு செல்லக்கூடிய ஆரம்ப திகதி மே 17 என வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.