இந்தியாவின் நிலைப்பாடு ஈழத்தமிழர்களுக்கு , சாதகமா? சாபமா?
ஐநா மனித உரிமை சபையில் பிரித்தானிய உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் , எதிராக 11நாடுகளும், வாக்கெடிப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா உட்பட 14 நாடுகள் தவிர்த்து கொண்டது.
இங்கே ஏனைய நாடுகளை தாண்டி இந்தியா ஆதரவாக வாக்களிக்கவில்லை என்று தமிழ் தேசியவாதிகள் என்று தங்களை கூறிக்கொண்டு வியாபார அரசியல் செய்யும் சிலர் துள்ளிக்குதிக்கிறார்கள்.
தூர நோக்கோடு பார்த்தால் இந்தியாவின் நிலைப்பாட்டில் தவறு இல்லை என்றே தோன்றுகின்றது அதே நேரம் இந்தியா 13 திருத்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளது.
. சற்று பின் நோக்கிய பார்ப்போமானால் கிடைக்கப்பெற்ற பல சந்தர்ப்பங்களை நாம் கைநழுவவிட்டுள்ளோம் என்பது உண்மை அதே போன்று இந்த சந்தர்ப்பமும் கைகழுவி போகவிடாமல் சாதகமாக எமது தமிழ் அரசியல் தலைவர்கள் செயல்படுத்துவார்களா என்பது கேள்வியாகவே உளாளது.
எதையும் அலசி ஆராயாமல் எழுந்தமான சில அரசியல் தலைவர்களின் கருத்துக்களே எமது இனத்தின் சாபமாக அமைகின்றது. யாழ் ஊடக மையத்தில் மைக் முன்பாக அமர்ந்து விட்டால் தாங்கள் தான் தமிழ் இனத்தின் தலைவர்கள் என்றும் ஏனையவர்கள் இனத்தின் துரோகிகள் என்றும் கூவும் சில கூட்டங்கள் திரைமறைவில் சிங்கள அரசியல் தலைவர்களின் கைக்கூலிகள் என்பது வெட்ட வெளிச்சம்.
கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் விடுதலை போராட்ட வடிவங்களோடு இனைத்து தமது பங்களிப்பையும் செலுத்தியுள்ளார்கள். இதனால் யாரையும் குறைத்து மதிப்பிடவோ அல்லது ஒருவருக்கு எதிராக விரல்களை நீட்டி அதிகாரம் செலுத்தவோ முடியாது.
எனவே கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து இப்போது பெரும்பான்மையான தமிழ் அரசியல் கட்சிகள் 13 சந்திக்கின்றது அதுவே ஈழத்தமிழர்களுக்கு இப்போதைக்கு சாத்தியமான தீர்வு . எனவே கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒருங்கிணைந்து 13 உடன் நடைமுறைப்படுத்த இந்தியாவிற்கு அழுத்தம் கொடுப்பதே ஆரம்ப தீர்வாக அமையும். அதனையே இந்தியா உட்பட பல நாடுகள் எதிர் பார்க்கின்றது . இந்த நிலையில் இந்தியாவின் நடுநிலை என்பது ஈழத்தமிழர்களுக்கு சாதகமான தே.