E484K: புதிய வகையான வைரஸ்!
தென்னாபிரிக்காவில் பரவும் கொரோனா தொற்றின் E484K என்கிற புதிய வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்கான இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த வகையிலான வைரஸ் தற்சமயம் தென்னாபிரிக்க நாட்டில் பரவிவருகின்றதாக கூறப்படுகின்றது.
குறித்த நபர் தன்சானியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.