ஒருமுறை மட்டும் போட்டாலே பலன்தரும் புது தடுப்பூசி!
ஒரு முறை மட்டுமே போட்டுக்கொள்ளும் Johnson & Johnson தடுப்பூசி பலன் தருவதாகவும், பாதுகாப்பானதாய் இருப்பதாகவும் அமெரிக்கக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.
Pfizer, Moderna தடுப்பூசிகளைக் காட்டிலும் மலிவான Johnson & Johnson தடுப்பூசியை, சாதாரண குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தலாம் என்றும் ஜூன் மாதத்திற்குள் 100 மில்லியன் முறை போடும் அளவில் தடுப்புமருந்தை அமெரிக்காவுக்கு வழங்க நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தது.
பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், கனடா உட்பட COVAX திட்டத்திற்கும் தடுப்புமருந்து வழங்க தயாராக உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.