போர்க்குற்றச்சாட்டில் கோட்டா மீது சர்வதேச விசாரணையை கோரினார் சிறிதரன்
இலங்கையில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் இப்படியே வாழ்வதா அல்லது பிரிக்கப்பட்ட நாட்டில் வாழ்வதா என்பது குறித்து அறிவதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் எம்.பி ஸ்ரீதரன் இதனை முன்வைத்தார்.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிடம் ஒருகோரிக்கையை முன்வைக்கின்றேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். அதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொலை செய்து இழுத்துக் கொண்டுவந்ததாக தெரிவித்திருந்தார். இதனை வாக்குமூலமாகக் கொண்டு விசாரணை செய்யும்படி நான் இந்த நாடுகளிடம் வலியுறுத்துகின்றேன் என்று தெரிவித்தார்.
இந்த உரையின்பின்னர் குறுக்கீடு செய்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், ஜனாதிபதியை சர்வதேச அரங்கிற்கு இழுத்துச்சென்று விசாரணைக்கு உட்படுத்த இடமளிக்கமாட்டோம் என்று தெரிவித்தார்.