März 28, 2025

கைதாகியிருந்த தமிழக மீனவர்கள் 33 பேர் விடுவிப்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 33 தமிழக மீனவர்கள் அடங்கிய குழு இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.சென்னை செல்லலும் இந்தியன் ஏயர்லைன்ஸ் விமானம் மூலமாக இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.