November 21, 2024

அபாய வலயத்திலிருற்து வந்தாலும் வடக்கில் இனி தனிமைப்படுத்தல் இல்லை! வெளியான முக்கிய செய்தி…!!

கொரோனா அபாய வயங்களில் இருந்து வருபவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்படுவில்லையென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்று யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று வடமாகாணத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 45 பேர் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். அதில் 20 பேர் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள். ஏனைய 25 பேரும் ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களோடு முதல் நிலை தொடர்பில் இருந்தவர்கள்.

இதோடு சேர்த்து வவுனியா நகரப் பகுதியில் ஏற்பட்ட பரம்பலில் இதுவரைக்கும் 244 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று யாழ்ப்பாண மாவட்டத்திலே யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்கள். இவர்கள் ஐந்து பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கொழும்பில் இருந்து வந்து இங்கே தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.அவர்களுக்கான பிசிஆர் சோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்ட போது தோற்று உறுதிப்படுத்தப்படுகின்றது.

மேலும் மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட இரண்டு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

நேற்று மன்னார் மாவட்டத்தில் மன்னார் பொது வைத்தியசாலையில் வடமாகாணத்தின் 2வது கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் உப்புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்அவர் நோய்வாய்ப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கே அவருக்கான பிசிஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதுவரையான காலப்பகுதியில்- ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்றுவரை- வடமாகாணத்தில் 351 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இதில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 234 பேரும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 70 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த 32 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 10 பேர்,முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேருமாக வடமாகாணத்தில் ஜனவரி மாதத்திலேயே 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப் பட்டது.

கடந்த வாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த சுற்றறிக்கையிலன் பிரகாரம், கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் இருந்து குறைவான பரவல் உள்ள இடங்களிற்கு செல்பவர்களை, தனது முன்னனுமதி இல்லாமல் தனிமைப்படுத்த வேண்டாம் அதாவது என்று சொல்லியுள்ளார். அதனடிப்படையில் இப்பொழுது யாரையும் தனிமைப்டுத்துவது இல்லை.