சாம்சுங் நிறுவத்தின் தலைவருக்கு இரண்டரை வருட சிறை!
உலகின் மிகப்பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சுங் நிறுவனத்தின் தலைவருக்கு மிகப்பொிய கையூட்டு மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளி என உறுதியானதைத் தொடர்ந்து அவருக்கு இரண்டரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டள்ளது.
லீ ஜெய்-யோங் சாம்சுங் நிறுவனத்தின் கீழ் இயங்கிவந்த இரண்டு இணை நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்காக, முன்னாள் தென் கொரியா அதிபர் பார்க் கியுன் ஹை வின் கூட்டாளியான சோய் சூன் சில் என்பவருக்கு கையூட்டு வழங்கிய குற்றத்திற்காக ஜெய்-யோங் 2017-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பிறகு அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டது, பின்னர் மேல்முறையீடு செய்ததில் அந்த தண்டனையும் இடைநீக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சியோல் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஜெய்-யோங்க்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதித்து சியோல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.