November 24, 2024

பிரித்தானியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸின் 7 அறிகுறிகள் இது தான்! சுகாதாரத் துறை எச்சரிக்கை தகவல்

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ், வழக்கமான கொரோனா பாதிப்பு காலத்தில் ஏற்படக் கூடிய அறிகுறிகளை விடவும் கூடுதலாக 7 அறிகுறிகள் தென்படும் என்று இங்கிலாந்து சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இங்கிலாந்து சுகாதாரத் துறையின் கணிப்பு படி அந்த நாட்டில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வேகத்துடன் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

எனவேதான் அதிகம் பேரை குறுகிய காலத்தில் இது பாதிக்கிறது என்பது அரசு எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி பிரித்தானியாவிற்கு செல்லும் விமான சேவையை சில ஐரோப்பிய நாடுகள் தற்போதைக்கு தடை செய்துள்ளன.

புதிதாக பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் வழக்கமாக ஏற்படும், வறட்டு இருமல், வாசனை திறன் இழப்பு, சுவை திறன் இழப்பு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மட்டுமில்லாமல், மேலும் 7 அறிகுறிகள் தென்படும் என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அவை, மிகுந்த சோர்வு, பசி இல்லாமல் போவது, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசை வலி போன்றவை இதற்கான அறிகுறிகள் என்று கூறப்படுகிறது.

இந்த வகை வைரஸ் பரவும் முறையில் பெரிய மாற்றம் கிடையாது. ஆனால் இருமும்போதோ, தும்மும் போதோ, நோயாளியிடம் இருந்து வெளிப்படும் வைரஸ்களின் மூலமாக பரவும் வேகம் அதிகமாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்வது மிகவும் நல்ல நடவடிக்கை என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.