துயர் பகிர்தல் சூரியகலா நித்தியானந்தன்
(BA – ஓய்வுநிலை ஆசிரியை – கொழும்பு விவேகானந்தா கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரி)
தோற்றம்: 16 நவம்பர் 1959 – மறைவு: 20 நவம்பர் 2020
யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ் கல்லூரி வீதியை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பார்வதி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சொர்ணம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(சைவசிந்தாந்த சரபம், வித்துவான், ஓய்வுநிலை ஆசிரியர்) தங்கலட்சுமி தம்பதிகளின் அருமை மகளும்,
அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை மங்களேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நித்தியானந்தன்(ஓய்வுநிலை – மஸ்கன் லிமிடெட்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பூரணி அவர்களின் ஆருயிர்த் தாயாரும்,
சிவகுமாரன்(லண்டன்), ரஜனி(யாழ்ப்பாணம்), சிவகலா(கனடா), காலஞ்சென்ற குகஸ்ரீ(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
உமாஸ்ரீ(லண்டன்), கணேசராஜா(ஓய்வுநிலை அதிபர்- யாழ் இந்துக் கல்லூரி), தவராஜா(கனடா), ரவிச்சந்திரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான நற்குணசிங்கம், பத்மநாதன், சிவகாமசுந்தரி, அருளானந்தன், சிவயோகசுந்தரி, கருணானந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சிவநேசவதி, லீலாவதி மற்றும் கந்தையா, தேவரஞ்சினி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக நெருங்கிய உறவுகள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியையில் பங்கேற்க முடியும் என்பதை பணிவன்போடு அறியத்தருகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Address:- Get DirectionNo. 25, 1st Chapel Lane, Wellawatte, Colombo
தொடர்புகளுக்கு:-