யாழ்.ஊடக அமையத்திலிருந்தும் சுமந்திரனிற்கு காசு?
கனடா ஊழல் தொடர்பில் கருத்து வெளியிட அனுமதித்தமைக்கு எதிராக யாழ்.ஊடக அமையத்திற்கு எதிராக நஸ்ட ஈடு கோரி எம்.ஏ.சுமந்திரன் கடிதம் அனுப்பவுள்ளாராம்.
சாவகச்சேரியில் நடைபெற்ற கட்சி கூட்டத்திலேயே அவர் அதனை அறிவித்துள்ளார்.அத்துடன் செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீதும் தேர்தல் செலவிற்காக பணம் பெற நஸ்ட ஈடு கோரவுள்ளாராம்.
இதனிடையே அவரது சகபாடியான சிறீதரனோ தங்களோடு ஒத்துழைத்தால் தமிழரசுக் கட்சி தலைவராக மாவை தேர்தலில் தோற்றால் தனது இடத்தை ராஜினாமா செய்து விட்டு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்று சாவகச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில், எம்.ஏ.சுமந்திரனுடன் பங்குகொண்டு உரையாற்றிய சிறிதரன், எதிர்வரும் தேர்தலில் மாவை தோற்றால், தனது பதவியை இராஜினாமா செய்து, மாவையை எம்பி ஆக்குவேன் என சூளுரைத்துள்ளார்.
அதற்கு நிபந்தனைகளை பட்டியலிட்ட அவர், உதயன் பத்திரிகை உரிமையாளர் ஈ.சரவணபவன் மீதும் இன்னொரு தமிழரசு கட்சி உறுப்பினர் மீதும் தான் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுத்தால், அந்த தியாகத்தை செய்வேன் எனவும் கூறியுள்ளார்.
அத்தோடு அவரது தலைமைப் பதவிக்கும் ஆதரவாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கனடா நிதி முறைகேட்டை அம்பலப்படுத்திய பெண்மணி உள்ளிட்ட நால்வரை கட்சியிலிருந்து நீக்கிய நடவடிக்கைக்கு அவர்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.