November 25, 2024

வென்றாலும் சிறீதரன் நாடாளுமன்றம் போகமுடியாது?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை காப்பாற்ற முற்பட்டு நாடாளுமன்ற தேர்தலில், யாழ் – கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி வேட்பாளர், சிவஞனாம் சிறிதரன்; போட்டியிடும் வாய்ப்பை இழக்கலாமென ஆதரவாளர்கள் அச்சங்கொண்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பாரிய வெற்றி பெற்ற 22 பாராளுமன்ற உறுப்பினர்களும், கள்ள வாக்குகள் மூலம் தான் தெரிவு செய்யப்பட்டதாகவும், அந்தக் காலப்பகுதியில் தான் ஒரு அரசாங்கப் பள்ளி ஆசிரியராக இருந்தும், தானே 75 கள்ள வாக்குகள் போட்டதாகவும், ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது கருத்து, தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளை மீறிய குற்றத்திற்காக, தேர்தல் ஆணையத்திடம்

முறைப்பாடு செய்ய சில கட்சிகள் முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சி.சிறிதரன் எப்படி 75 கள்ள வாக்கை போட்ட பிறகு, கடந்த  இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, இலங்கை அரசியல் சாசனப்படி சத்தியப்பிரமாணமும் செய்து, இந்த முறை எப்படி தேர்தலில் போட்டியிட முடியுமென தேசிய கட்சிகள் காய் நகர்த்த முற்பட்டுள்ளன.