März 28, 2025

ஏப்ரல் 21 :இதுவரை 176 பேர் !

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இதுவரை 176 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் இதுவரை 771 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஹேரத் கூறியுள்ளார்.
இதேவேளை, கலகொட அத்தே ஞானசார தேரர், நாளைய தினம் (15) இரண்டாவது தடவையாகவும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.