வட கொரியாவில் நாட்டை விட்டு தப்ப முயன்ற தம்பதியை சுட்டுத்தள்ளிய அதிகாரிகள்
வடகொரியா உலகத்திலேயே விசித்திரமான நாடாக இருந்து வருகிறது. அந்நாட்டில் நடப்பது என்ன? என்பது தொடர்பான தகவல் வெளி உலகத்திற்கு இன்று வரை தெரியாது. பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகள் வடகொரியா குறித்த தகவலை கூறினால் மொத்தமும் அவ்வுளவுதான்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், சீன நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள வடகொரியாவின் கொரோனா பரவல் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், அங்கு கொரோனா பரவியதற்கான தகவலும் இல்லை.
வடகொரியாவில் உள்ள ரியான்காங் மாகாணத்தில் இருக்கும் ஹியென்சன் பகுதியில் 50 வயதுள்ள தம்பதிகள் வசித்து வந்த நிலையில், மனைவியுடைய இளம் சகோதரியின் 14 வயது மகனும் உடன் வசித்து வந்துள்ளார். மேலும், வடகொரியாவின் கொரோனாவை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 14 வயது சிறுவனை தென்கொரியாவிற்கு அனுப்பிவிட்டு, நாமும் சீனாவிற்கு தப்பி செல்ல வேண்டுமென்று தம்பதிகள் நினைத்துள்ளனர். இவர்களின் திட்டப்படி இரண்டு நாடுகளுக்கு இடையே ஓடும் யாளு ஆறு மூலமாக கடந்து செல்ல முற்படவே, இவர்களின் திட்டம் தோல்வியை தழுவி வடகொரிய அதிகாரிகளால் மூவரும் சிறைபிடிக்கப்படுகின்றனர்.
இதில் சிறுவனிற்கு மட்டும் 14 வயது தான் ஆகிறது என்பதால் சிறுவனை விடுவித்த நிலையில், இந்த தம்பதிகளை அதிகாரிகள் சுட்டு கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. மேலும், தம்பதிகளை அதிகாரிகள் சில நாட்கள் சித்ரவதைபடுத்தி கொலை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.