November 21, 2024

வட கொரியாவுக்கு சீனா ஆதரவு..! சீனா ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு

சீனாவை பாராட்டிய வட கொரியா தலைவர் கிம்-ஜாங்-உனுக்கு சீன ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

உலகளில் 40,14,503 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் 2,76,253 பேர் பலியாகியுள்ளனர்.

எனினும், கொரோனா பிடியில் முதலில் சிக்கிய சீனா தற்போது முழுமையாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில், சீனா கொரோனா வைரஸை கட்டுபடுத்தியதற்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்குக்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பினார்.

சீனாவை பாராட்டிய கிம் ஜாங்-உனுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ஜி ஜின்பிங், கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட வட கொரியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராக உள்ளது.

வட கொரியாவின் தேவைகளின் அடிப்படையில் சீனாவின் திறனுக்கு ஏற்ப அதன் ஆதரவை வழங்குவதாகவும் வாய்மொழி செய்திகளின் பரிமாற்றத்தில் ஜனாதிபதி ஜி கூறினார்.

எனினும், வட கொரியா இதுவரை எந்த கொரோனா வைரஸ் வழக்குகளையும் உலக சுகாதார அமைப்புக்கு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.