116 வயதைக் கொண்டாடிய ஃப்ரெடி ப்ளோம்! கொரோனா கிட்டவும் நெருங்கவில்லை!
உலகின் முதியவர்களில் ஒருவரான 116 வயதுடைய ஃப்ரெடி ப்ளோம் (Fredie Blom) கொரோனா தொற்றுக்கு உள்ளாகாமல் மிகவும் ஆரோக்கியமாக
இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இவர் தென்னாபிரிக்காவில் 1904 ஆண்டு பிறந்தவர். கடவுளின் கிருபையால் நான் இவ்வளவு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறேன் உலகின் மிகப் பழமையான மனிதர்களில் ஒருவரான ப்ளோம் கூறியுள்ளார்.
கேப்டவுனுக்கு அருகில் அமைந்துள்ள கிரேட் விண்டர்பெர்க் மலைத்தொடருக்கு அருகேயுள்ள கிராமப்புற நகரமான அடிலெய்டில் 1904 ஆண்டு ப்ளோம் பிறந்தார்.
இவர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தனது 116 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
வெண்சுருட்டைப் பற்றவைத்துக்கொண்டு 1918 ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் காரணமாக உலகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் (10 மில்லியன்) உயிரிழந்ததாகவும் அதில் அவரது சகோதரியும் உயிரிந்தார் என்பதை நினைவுகூர்ந்தார்.
ப்ளோம் தனது வீட்டின் முன் முற்றத்தில் அமர்ந்திருக்க பேரக்குழந்தைகள் சுற்றித் திரிந்தனர். பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பாடுவதற்கு அயலவர்கள் விரைவில் வந்தனர்.
ப்ளோம் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை கேப் டவுனைச் சுற்றியுள்ள பண்ணைகளில் வேலை செய்துள்ளார்.
86 வயதான ப்ளோமின் மனைவி ஜீனெட்டை ஒரு நடனத்தில் நிகழ்வில் சந்தித்து அவரின் இதயத்தை வென்றார். இவர்கள் திருமணம் செய்து 50 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
ப்ளோமிற்கு பிள்ளைகள் இல்லை. ப்ளோமினை திருமணம் செய்வதற்கு முன் ஜீனெட்டின் ஏற்கனவே திருமணம் செய்து அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அக்குழந்தையையே (ஜாஸ்மியன் டோரியன் )அவர் தனது வளர்ப்பு மகளாகக் வளர்த்து வந்தார்.
38 வயதான ஜாஸ்மியன் டோரியன் அவர் எங்களுக்கான எல்லாவற்றையும் செய்தார். அவர் எங்கள் இருவரையும் தனது சொந்தமாக ஏற்றுக்கொண்டார் என்றார்.
வேலை செய்வதற்காக அதிகலை 3 அல்லது 4 மணிக்கு எழுந்துவிடுவார். அவர் கால்நடை வளர்ப்பதையும் தோட்டக் கலையையும் நேசித்தார் என்று ஜாஸ்மியன் டோரியன் மேலும் அவர் குறித்து குறிப்பிட்டார்.