ரவிகரனும் அழைப்பு விடுக்கின்றார்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி வடகிழக்கில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டங்களை முன்னெடுக்கமுடிவாகியுள்ளது.
இதனிடையே சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
போராட்டம் வலுப்பெற அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்குமாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் திருகோணமலையிலும் காலை 10 மணியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்கள்.
போராட்டம் வலுப்பெற அனைவரும் திரண்டு ஆதரவு வழங்குமாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.