யாழில். 400 வருடங்கள் பழமையான சிவன் ஆலயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணி ஆரம்பம்
அழிவடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் பணி , யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆழிவடைந்த இவ் ஆலயத்தின் எஞ்சிய பாகங்களையும் அத்திவாரங்களையும் அழிபாடுகளையும் கொண்டு இவ்வாலயமானது கற்பகிரகம, அந்தராளம், முன்மண்டபம், துணைக்கோவில்கள், சுற்றுமதில், மடங்கள், கேணி என்பவற்றை கொண்டிருந்தது என்பதனை உறுதிப்படுத்த முடிகின்றது.